‘யு’ வாங்கிய எனக்குள் ஒருவன்!

‘யு’ வாங்கிய எனக்குள் ஒருவன்!

செய்திகள் 18-Nov-2014 1:51 PM IST VRC கருத்துக்கள்

சித்தார்த் நடித்துள்ள ‘காவியத்தலைவன்’ வருகிற 28-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்துடன் சித்தார்த் நடித்துள்ள இன்னொரு படம் ‘எனக்குள் ஒருவன்’. கன்னட ‘லூசியா’வின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டு, படம் சமீபத்தில் சென்சார் ஆனது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர். பிரசாத் ராமர் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக தீபா சன்னிதி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தை ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘ஜில் ஜங் ஜக்’கின் வித்தியாசமான விளம்பரம் - வீடியோ


;