வாழ்த்துக்கள் MR & MRS தனுஷ்..!

வாழ்த்துக்கள் MR & MRS தனுஷ்..!

செய்திகள் 18-Nov-2014 12:30 PM IST Chandru கருத்துக்கள்

2002ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ், 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டாரின் மருமகனாக மாறினார். நவம்பர் 18ஆம் தேதி ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் தமிழ்த்திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். இதோ... MR & MRS தனுஷ் தற்போது 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜாவின் மகன், சூப்பர்ஸ்டாரின் மருமகன் என்பதெல்லாம் மறைந்துபோய் தனுஷ் என்ற நடிகனாகவே தற்போது ரசிகர்கள் அவரைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் தன் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவரும் இந்த ‘விஐபி’, தற்போது ‘அனேகன்’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அவரின் மனைவி ஐஸ்வர்யா ‘3’ படத்தைத் தொடர்ந்து தான் இயக்கி வரும் ‘வை ராஜா வை’ படத்தின் ரிலீஸுக்காக பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

என்றும் தொடரட்டும் இந்த திருமண பந்தம்... வாழ்த்துக்கள் தனுஷ், ஐஸ்வர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;