பைரேட், ராபின் ஹுட், ஹேக்கர்... ரஜினி அவதாரங்கள்!

பைரேட், ராபின் ஹுட், ஹேக்கர்... ரஜினி அவதாரங்கள்!

செய்திகள் 18-Nov-2014 11:51 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த 16ஆம் தேதி ‘லிங்கா’ படத்தின் பாடல்களும், புதிய டிரைலரும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளமெங்கும் ‘லிங்கா’ பற்றிய பேச்சுக்கள்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. 64 வயதிலும் ரஜினியின் ஸ்டைல், கம்பீரம், டான்ஸ் மூவ்மென்ட், டயலாக் டெலிவரி என ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. குறிப்பாக ‘லிங்கா’வின் பாடல்களில் ரஜினி அதகளம் பண்ணியிருக்கிறார்.

நேற்று ‘லிங்கா’ படத்திலிருந்து ரஜினியும், அனுஷ்காவும் ஆடிப்பாடும் ‘மோனா கேசோலினா...’ பாடல் டீஸர் வெளியிடப்பட்டது. இதில் மூன்று வித்தியாசமான உடைகளில் தோன்றியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். இந்தப் பாடலைப் பற்றி ‘ட்வீட்’ செய்துள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி, ‘‘ஒரு திருடனின் இதயத்தை ஒரு பெண் எப்படித் திருடுகிறாள் என்ற கான்செப்ட்டை மையமாக வைத்துதான் ‘லிங்கா’ படத்தில் ‘மோனா கோசோலினா...’ பாடலை உருவாக்கியிருக்கிறோம். அதில்... பைரேட், ராபின் ஹுட், ஹேக்கர் என மூன்று சிறிய கதைகளாக பயணிக்கிறது இப்பாடல்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;