‘இறுதிச்சுற்று’ முடித்துவிட்டு அடுத்த சுற்றுக்கு போகும் மாதவன்!

‘இறுதிச்சுற்று’ முடித்துவிட்டு அடுத்த சுற்றுக்கு போகும் மாதவன்!

செய்திகள் 18-Nov-2014 10:42 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ஹிந்தியில் “சால காதூஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கே. பிரசாத் இயக்கும் இப்படத்தில் பாக்ஸராக நடிக்கும் மாதவன் அதற்காக நீண்ட தலைமுடி, தாடி வைத்திருந்தார். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து தனது நீண்ட முடி மற்றும் தாடியை எடுத்த மாதவன் அடுத்து ‘தனு வெட்ஸ் மனு-2’ ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக இதன் முதல் பாகத்தில் நடித்த அதே கங்கணா ரணாவத் தான் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - டீசர்


;