விஜய் 58 : ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி சந்தோஷம்!

விஜய் 58 : ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி சந்தோஷம்!

செய்திகள் 18-Nov-2014 10:26 AM IST Chandru கருத்துக்கள்

80 வருட தமிழ் சினிமா வரலாற்றில் ‘டாப் 10 ஹீரோயின்களி’ன் பட்டியலைத் தயார் செய்தால், அதில் தாராளாமாக நடிகை ஸ்ரீதேவிக்கும் ஒரு ‘சீட்’ போட்டு வைக்கலாம். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. சூப்பர்ஸ்டார் ரஜினியுடனும், உலகநாயகன் கமலுடன் பல படங்களில் ஜோடி போட்டிருக்கிறது இந்த ‘16 வயதினிலே’ மயில்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ஸ்ரீதேவி. அந்த பரவச அனுபவம் குறித்து தன் சந்தோஷங்களை ‘ட்வீட்’களாகப் போட்டிருக்கிறார் அவர். அதில்,

‘‘புதிய தமிழ்படம் ஒன்றிற்காக சென்னையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் பட ஷூட்டிங் என் ஞாபகத்தில் வந்து போகிறது. என்மீது இப்போதும்கூட மாறாத அன்பு வைத்திருக்கும் சென்னைக்கு என் நன்றிகள். இன்றைய தலைமுறை நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருமே சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் வேலை செய்யும்போது நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.’’ என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.

‘விஜய் 58’ படத்திற்காக, தற்போது சென்னை ஈசிஆரில் உள்ள பிரம்மாண்ட செட்டில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், மற்றும் 300 துணை நடிகர்களுடன் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;