த்ரிஷாவுக்கு கல்யாணம்..? வெறும் வதந்தியாம்!

த்ரிஷாவுக்கு கல்யாணம்..? வெறும் வதந்தியாம்!

செய்திகள் 18-Nov-2014 9:46 AM IST Chandru கருத்துக்கள்

எதுவுமே கிடைக்கவில்லையென்றால், எந்த நடிகைக்காவது திருமணம் செய்து வைத்து அழகு பார்ப்பதே சில இணையதளங்களுக்கு வேலையாகப் போய்விட்டது. நேற்றும் அப்படித்தான்... த்ரிஷாவும், தயாரிப்பாளர் வருண் மணியனும் இருக்கும் சில போட்டோக்களையும், த்ரிஷாவின் கையில் மோதிரத்துடன் இருக்கும் போட்டோ ஒன்றையும் பதிவிட்டு, ‘‘நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயமாகிவிட்டது... விரைவில் திருமணம்’’ என என்றொரு செய்தியை போகிற போக்கில் கோடம்பாக்கத்தில் உலவவிட்டார்கள். காட்டுத் தீ போல பரவிய இந்த செய்தியைக் கேள்விப்பட்ட த்ரிஷா உடனடியாக இதனை மறுத்து ‘ட்வீட்’டும் செய்துவிட்டார். அப்படியும் இந்த செய்தியை விட்டாபாடில்லை சில மீடியாக்கள். தற்போது இதுகுறித்து அவரே சில விஷங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது...

‘‘எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்றே தெரியவில்லை. நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். அப்படிப்பட்ட ஒரு நாளை சந்தோஷமாக நானே எல்லோருக்கும் முதலில் அறிவிப்பேன். பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படமொன்றின் படப்பிடிப்பிற்காக நான் அரக்கு வேலியில் இருந்தேன். பிறகு எப்படி எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்?’’ என்று தன் சம்பந்தப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;