மிஷ்கினின் ‘பிசாசு’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விமர்சனம்

மிஷ்கினின் ‘பிசாசு’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விமர்சனம்

செய்திகள் 17-Nov-2014 3:04 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் பெயரைப் பார்த்து படம் பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டங்களைக் கொண்டவர்களில் பாலாவும், மிஷ்கினும் முக்கியமானவர்கள். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரிக்க, மிஷ்கின் இயக்கியிருக்கும் ‘பிசாசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் தற்போது வெளிவந்திருக்கிறது. என்ன சொல்கிறது.... ‘பிசாசு’?

1 நிமிடம் 12 வினாடிகள் ஓடும் இந்த டீஸரில் எந்த வசனமும் இடம்பெறவில்லை. மிஸ்கின் ஸ்டைல் கேமரா கோணங்களும், நடிகர்களின் ‘க்ளோசப்’ முகபாவனைகளுமே இந்த டீஸரிலும் அதிகமாக இடம் பிடித்திருக்கின்றன. குறிப்பாக அவரின் ஃபேவரைட் ‘ஷாட்’டான கால்களை மட்டும் காட்டும் காட்சி இந்த டீஸரிலும் இருக்கிறது. அதேபோல் ‘சப்வே’ காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இவற்றைத் தவிர்த்து ஹீரோ தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் ஒரு காட்சி, ரத்த சகதியில் பெண் சடலம் ஒன்றை இழுத்துச் செல்லும் காட்சி என ரசிகர்களை உறைய வைக்க முயன்றிருக்கிறது இந்த ‘பிசாசு’. ஆனாலும் ஏதோ ‘குறும்படம்’ பார்க்கும் உணர்வையும் மேற்படி காட்சிகள் ஏற்படுத்துவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அறிமுக ஹீரோ நாகாதான் இந்த டீஸர் முழுக்க நிறைந்திருக்கிறார். முகத்தை மூடி மறைக்கும் அவரது தலைமுடியும், பயம் கலந்த விழிகளும் ‘பிசாசு’ படத்திற்கு பெரிய ப்ளஸ். ஆனால் பிசாசாக நடித்திருக்கும் ஹீரோயின் பிரயாகாவின் ‘என்ட்ரி’ இதில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. ராதா ரவி இரண்டு ஷாட்களில் வந்து போகிறார்.

அரோல் கொரலி என்பவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். ‘திகில்’ படங்களுக்குரிய உணர்வைக் கொடுத்திருக்கிறது அவரின் பின்னணி இசை.

இந்த டீஸர் மூலம் இது ஒரு அமானுஷ்ய படம் என்பதை மட்டுமே உணர்ந்துகொள்ள முடிகிறது. மற்றபடி இதன் கதை என்னவாக இருக்கும் என்பதையோ, ‘பிசாசு’ என்ட்ரியையோ மிஷ்கின் காட்டவில்லை. ஒரு வேளை ‘பிசாசு’வின் முழுநீள டிரைலர் வரும்போது இதற்கெல்லாம் பதில் கிடைக்கலாம்.

மொத்தத்தில்.. இந்த ‘பிசாசு’ டீஸர் இது ஒரு வழக்கமான பேய் படம் அல்ல.... அதையும் தாண்டி ‘த்ரில்லிங்’காக சில விஷயங்கள் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;