பழசை மறக்காத விஜய்... கண்கலங்கிய எஸ்.ஜே.சூர்யா!

பழசை மறக்காத விஜய்... கண்கலங்கிய எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 17-Nov-2014 12:15 PM IST Chandru கருத்துக்கள்

‘இசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தின் பாடல்களை சமீபத்தில் நடிகர் விஜய் வழங்க, நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, ‘‘ஒரு முக்கியமான காலகட்டத்தில் ‘குஷி’ என்றொரு வெற்றிப்படத்தை எனக்குக் கொடுத்தார் சூர்யா. கண்டிப்பாக ஒரு ‘ஹிட்’ கொடுத்தே ஆக வேண்டிய சூழலில்தான் அந்தப் படத்தில் நான் நடித்தேன். ஒருவேளை ‘குஷி’ தோல்விப் படமாக அமைந்திருந்தால்...? என்னுடைய கேரியரே மாறியிருக்கும். என் வாழ்நாள் முழுவதும் ‘குஷி’ தந்த சூர்யாவை மறக்க மாட்டேன். இந்த மேடையிலும் அவருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!’’ என்றார்.

அதன் பிறகு பேசிய எஸ்.ஜே.சூர்யா ’’குஷி படத்தில் நடித்தபோது இருந்த விஜய் சாருக்கும் இப்போது இருக்கும் விஜய் சாருக்கும் எவ்வளவோ வளர்ச்சிகள் மாறிவிட்டன. இப்போது அவர் இருக்கும் உயரமே வேறு. ஆனால், இத்தனை உயரத்திற்கு அவர் வந்த பிறகும், நான் கொடுத்த ஒரு படத்தை மறக்காமல் நினைவுகூர்ந்து நன்றி சொல்வார் என நினைக்கவேயில்லை. அவர் பேசும்போது என்னையும் அறியாமல் கண் கலங்கிவிட்டது. விஜய் சாருக்கு என் நன்றிகள்!’’ என்று உணர்ச்சிவசப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;