கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

செய்திகள் 17-Nov-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரித்து, மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’. இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் நாகாவும், கதாநாயகியாக புதுமுகம் பிரயாகாவும் நடித்துள்ளனர். மற்றும் ராதாரவி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள இப்படத்திற்கு அரோல் கொரிலி இசை அமைக்க, தமிழச்சி தங்கபாண்டியன் பாடல்களை எழுதியுள்ளார். ரவிராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது,

‘‘நான் இயக்கிய ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு எல்லா பத்திரிகையாளர்களும் நல்ல விமர்சனங்களை தந்தார்கள். படம் பார்த்தவர்களும் பாராட்டினார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தபடி படம் வெற்றி பெற்று எனக்கு பணம் ஈட்டி தரவில்லை. அப்போது நான் கண்கலங்கி நின்றபோது இயக்குனர் பாலா சார் படத்தை பார்த்து என்னை அழைத்தார். எனது கஷ்டத்தை அறிந்து தனது நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அது தான் ‘பிசாசு’ படம். கீழே விழ இருந்த என்னை கைதூக்கி விட்டவர் பாலா தான். அவருக்கு நான் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நாகா 4 மாதங்கள் என் அலுவலகத்திலேயே தங்கி இருந்து கஷ்டப்பட்டு அந்த கேரக்டராக உறுமாறி அற்புதமாக நடித்துள்ளான். கதாநாயகியாக நடித்துள்ள பிரயாகாவும் கடினமாக உழைத்துள்ளார். அழகான முகம் கொண்ட அவரை பெரும்பாலான் காட்சிகளில் பிசாசாக தான் காட்டியுள்ளேன். அவர் 60, 70 அடி ரோப்பில் தொங்கியபடி கூட நிறைய காட்சிகளில் நடித்துள்ளார். அதை பார்த்து அவரது அப்பா, அம்மா அழுவார்கள். அவர்கள் அப்படி அழும்போது நான் வேறு பக்கம் திரும்பிக் கொள்வேன். சில நேரங்களில் ரோப்பில் தொங்கும்போது சுவற்றில் அடிப்பட்டு அவருக்கு காலில் ரத்த காயங்கள் கூட பட்டதுண்டு! அதையைல்லம் பொருட்படுத்தாமல் நிறைய ரிஸ்க் எடுத்து இப்படத்தில் நடித்துள்ளார் பிரயாகா. அப்படி கஷ்டப்படுத்தியதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அது மாதிரி இப்படத்திற்கு ஒளிப்ப்திவு செய்துள்ள ரவிராய், இசை அமைத்துள்ள அரோல் கொரிலி ஆகியோரும் என் நிழலாகவே இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இப்படம் நான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும்’’ என்றார் மிஷ்கின்.

தொடர்ந்து பேசிய பாலா, ‘‘பொதுவாக மிஷ்கின் நிறையவே பேசுவார். ஆனால் இன்றைக்கு அடக்கமாக தான் பேசியுள்ளார். ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ அடக்கமாக பேச வைத்துள்ளது போலும்!’’ என்று பேசிய பாலாவிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டாலும் வழக்கம் போல அவர் நேரடியாக பதில் அளிக்காமல் விளையாட்டுத்தனமாக பதில்கள் அளித்து சமாளித்துக் கொண்டார்.

‘பிசாசு’ டிசம்பர் வெளியீடாம்! இப்படத்தை தமிழகம் முழுக்க ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ ரிலீஸ் செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;