ரஜினி உயிரை காப்பாற்றிய கிரேன் ஆபரேட்டர்!

ரஜினி உயிரை காப்பாற்றிய கிரேன் ஆபரேட்டர்!

செய்திகள் 17-Nov-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

நேற்று சென்னையில் நடந்த 'லிங்கா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அப்போது படப்பிடிப்பில் தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று ரஜினியைக் காப்பாற்றுவதற்காக துணிச்சலுடன் செயல்பட்ட ஜவஹவர் என்பவரை குறித்து கே.எஸ்.ரவிகுமார் கண் கலங்க பேசினார். ‘‘ ஷிமோகாவில் ஒருநாள் மழையில் ரஜினி ரயில் பக்கத்தில் நடந்து வருவது போல ஒரு காட்சியை படமாக்கினேன். அந்த மழைக் காட்சியை ஜிம்மி ஜிப் கேமரா பயன்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக செயற்கை மழையை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் கூறிய நேரத்தில், நிஜத்திலேயே நல்ல மழை பெய்தது. மழையில் மின்சார ஒயர்கள் எல்லாம் தண்ணீரில் கிடப்பதைக் கவனிக்காமல் ஸ்டார்ட், ஆக்‌ஷன் என்றவுடன், ஜிம்மி ஜிப் கேமரா வேகமாகப் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்கு ஷாக் அடித்தது. ஒரே சத்தம். நான் அதையெல்லாம் கவனிக்காமல் காட்சியை படமாக்குவதிலேயே கவனமாக இருந்தேன். ஒரு புறம் பாட்டு வேறு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஷாக் அடித்ததில் ஜிம்மி ஜிப் கேமராவை இயக்கிக் கொண்டிருந்த த ஜவஹர் தூக்கி வீசப்பட்டார். அப்போது, ரஜினி இருந்த பக்கமாக கிரேன் போய்க்கொண்டிருந்தது. தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று மறுபடியும் எழுந்து நின்று தனது உயிரை பற்றி கவலைப்படாமல் ஜவஹர் ஷாக் அடிக்கும் கிரேனைப் பிடித்து நிப்பாட்டினார்" என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் பேசாமல் கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். அப்போது சத்யம் திரையரங்கமே அமைதியில் ஆழ்ந்தது. சில நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் தண்ணீர் குடித்த பிறகு மீண்டும் பேச துவங்கிய கே.எஸ்.ரவிகுமார் எனக்கு முன்னால் பேசிய பெரும்பாலானோரும் ‘லிங்கா’ ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக பேசினார்கள். ஆனால் என்னால் அப்படி பேச முடியாது. காரணம் சி.ஜி. ஒர்க் உட்பட பல வேலைகள் நடக்க வேண்டியிருக்கிறது. சென்சார் முடிந்த பிறகுதான் படத்தின் வெளியீடு குறித்து என்னால் பேச முடியும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;