‘திருசியம்’ பட நடிகை நடிக்கும் பந்து!

‘திருசியம்’ பட நடிகை நடிக்கும் பந்து!

செய்திகள் 15-Nov-2014 2:00 PM IST VRC கருத்துக்கள்

இன்றைய நவநாகரீக வாழ்க்கையில் செல்ஃபோன் தவிர்க்க முடியாத ஒரு தகவல் தொடர்பு சாதனமாகி விட்டது. செல்ஃபோன் எந்த அளவுக்கு தகவல் தொடர்புக்கு உபயோகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு செல்ஃபோனால் பல பிரச்சனைகளும், குற்றங்களும் நிகழ்கின்றன. செல்ஃபோனில் வரும் ஒரு தவறான அழைப்பால் வரும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘பந்து’. அப்படி நிகழும் ஒரு பிரச்சனையில் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் ஒரு இளைஞனின் வாழ்க்கை காவல்த்துறையின் தவறான நடவடிக்கைகளால் எப்படி பந்தாடப்படுகிறது என்பதை இப்படத்தில் விறுவிறுப்பாக திரைக்கதை ஆக்கியிருக்கிறாராம் இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ஜெய பாலகிருஷணன்.

‘வேதாத்திரி பிக்சர்ஸ்’ மற்றும் ‘பவர் கிங் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் புதுமுகம் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘திருசியம்’ படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த அன்ஷிபா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பல புதுமுகங்களும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் நந்தா இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களையும் பத்மாவதி என்ற பெண் பாடலாசிரியர் எழுதியுள்ளார், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது. எஸ்.பி.முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இப்படம் படமாகியுள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;