‘பொங்கி எழு மனோகரா’வில் இயக்குனரின் சொந்த கதை!

‘பொங்கி எழு மனோகரா’வில் இயக்குனரின் சொந்த கதை!

செய்திகள் 15-Nov-2014 12:51 PM IST Top 10 கருத்துக்கள்

‘‘1995 காலகட்டத்தில் 23 நாட்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பங்கள் தான் ‘பொங்கி எழு மனோகரா’ படத்தின் கதை’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ் ரங்கசாமி. அந்த நிஜ மனிதன் வேறு யாருமல்ல; படத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி தான்! இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்ற இவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ‘பொங்கி எழு மனோகரா’. இப்படத்தில் கதையின் நாயகனாக ‘ரூ’ படம் மற்றும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த இர்ஃபான் நடித்துள்ளார். கதாநாயகிகளாக புதுமுகங்கள் அருந்ததி நாயர், அர்ச்சனா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் இயக்குனர் சிங்கம் புலியும் நடித்துள்ளார். ‘பேனியன்’ என்ற பட நிறுவனம் சார்பில் பரந்தாமன் தயாரித்துள்ள இப்படம் சத்தியமங்கலம் சுற்றுப் பகுதிகளில் படமாகியுள்ளது.
இப்படத்திற்கு சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, கண்ணன் இசை அமைத்துள்ளார். ‘98 சதவிகிதம் காமெடி, 2 சதவிகிதம் சீரியஸ்’ என்ற வகையில் இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி. இப்படம் டிசம்பர் மாத வெளியீடாக திரைக்கு வருவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;