விஜய்க்கு 59 ஜி.வி.பிரகாஷுக்கு 50!

விஜய்க்கு 59 ஜி.வி.பிரகாஷுக்கு 50!

செய்திகள் 15-Nov-2014 11:28 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ முடிந்து சிம்புதேவன் இயக்கத்தில் தனது 58வது படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய். கடந்த 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் உள்ள பிரம்மாண்ட செட் ஒன்றில் இப்படத்திற்கான பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 59வது படத்தை ‘ராஜா ராணி’ புகழ் அட்லி இயக்கவிருக்கிறார் என்ற செய்திகள் அடிபட்டு வந்தன. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராமலேயே இருந்தது.

இந்நிலையில் இந்த செய்தியை தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ‘தனது 50வது படம் இளையதளபதி விஜய்யுடன்... ‘ராஜா ராணி’ டீம் மீண்டும் இணைகிறது’ என அவர் ட்வீட் செய்திருக்கிறார். அதோடு கடந்த நாலைந்து மாதங்களுக்கு முன்பே தனது 50வது படம் ஒரு முன்னணி ஹீரோவுடன் என ‘ட்வீட்’ செய்துவிட்டு, அதனை சிறிது நேரத்திலேயே தூக்கியும் விட்டார் ஜி.வி.பிரகாஷ். அந்தப் பிரபலம் விஜய்தான் எனவும், அப்படத்தை அட்லி இயக்கவிருக்கிறார் எனவும் நாம் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியும் தற்போது உண்மையாகியிருக்கிறது.

‘ராஜா ராணி’ டீம் + விஜய்... சூப்பர் ரொமான்ஸ் மூவி... வெயிட்டிங்!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;