முதல் மைல்கல்லைத் தொட்ட ‘கத்தி’, ‘பூஜை’

முதல் மைல்கல்லைத் தொட்ட ‘கத்தி’, ‘பூஜை’

செய்திகள் 15-Nov-2014 10:58 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் ‘கத்தி’யும், விஷாலின் ‘பூஜை’யும் அக்டோபர் 22ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது. ‘கத்தி’ படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 450 தியேட்டர்களிலும், ‘பூஜை’ படம் கிட்டத்தட்ட 300 திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளிவந்திருந்தாலும், இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ‘கத்தி’ படத்திற்கு ‘ஏ’, ‘பி’ சென்டர்களிலும், ‘பூஜை’ படத்திற்கு ‘பி’, ‘சி’ சென்டர்களிலும் அமோக வசூல் கிடைத்தது. குறிப்பாக ‘கத்தி’ படம் வெளிநாடுகளில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

இந்த இரண்டு படங்களின் ரிலீஸுக்குப் பிறகு வேறெந்த பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாததாலும், வெளிவந்த ஒன்றிரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததாலும் ‘கத்தி’யும், ‘பூஜை’யும் தொடர்ந்து 4 வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் முதல் இரண்டு இடங்களிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த இரண்டு படங்களுமே 25வது நாள் என்ற முதல் மைல் கல்லை எட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்த வாரங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், இந்த இரண்டு படங்களும் இன்னும் சில நாட்களுக்கு தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;