ஷங்கரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த பாடல்!

ஷங்கரை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த பாடல்!

செய்திகள் 15-Nov-2014 10:50 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்தாலும், இன்னொருபுறம் தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார் இயக்குனர் ஷங்கர். ‘ஜிகர்தண்டா’, ‘சதுரங்க வேட்டை’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களைப் பற்றியும் ‘மெட்ராஸ்’, ‘கத்தி’ படங்களின் பாடல்கள் பற்றியும் சிலாகித்து எழுதிய ஷங்கர் தற்போது ‘டாங்கா மாரி...’ பாடலைக் கேட்டுவிட்டு தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘தனுஷ்’ நடிப்பில் உருவாகிவரும் ‘அனேகன்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டாங்கா மாரி...’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. பாடலாசிரியர் ராகேஷ் எழுதிய இப்பாடலை ‘மரண கானா’ விஜியும், தனுஷுயும் இணைந்து பாடியிருக்கிறார்கள். லோக்கல் சென்னை பாஷை வரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப் பாடலைக் கேட்ட ஷங்கர் தனது மைக்ரோ&பிளாக்கிங் ஃபேஜ்ஜில் ‘‘அனேகன் படத்தின் டாங்கா மாரி... பாடலில் இடம்பெற்று வரிகள் ‘கிழி...’. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. மாஸ் குத்து! உடனடி ஹிட்!’’ என்று குறிபிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;