இனிய இசையால் நனைய வைத்த ‘நனையாத மழையே’

இனிய இசையால் நனைய வைத்த  ‘நனையாத மழையே’

செய்திகள் 15-Nov-2014 9:58 AM IST VRC கருத்துக்கள்

‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம என்று சொல்வார்கள். அதாவது ஒரு குடும்பம் விருத்தி அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்! அதே நேரத்தில் ஒரே ஒரு பொய் ஒரு கல்யாணத்தையே நிறுத்தி விடும் எனபது நிஜம் தானே? எல்லா மழை துளியுமே பூமியை தொட்டவுடன் அந்த ஒரு துளி கூட ஏதோ ஒரு இலக்கை நோக்கி போகும். இதுபோனற் கருத்துக்களை வைத்து உருவாகியுள்ள படம் ‘நனையாத மழையே’.

இந்தப் படத்தில் ஒரு மழைத்துளி எந்த இலக்கை நோக்கி போகிறது என்பது கதை’’ என்கிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் மகேந்திர கணபதி. ‘கபி&அபி சித்திரக்கண்கள்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அருண் பத்மநாபன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கதாநாயகியாக ‘49-0’ படத்தில் நடித்தவரும், பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றுள்ளவருமான வைதேகி நடித்துள்ளார்.

‘அரண்மனைக்கிளி’ உட்பட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கிச்சாஸ் இப்படத்தின் ஒளிப்பதிவினை செய்துள்ளார். ‘சேரன் பாண்டியன்’, ‘சிந்துநதிப்பூ’ படங்கள் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள சௌந்தர்யன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் புலவர் புலமைபித்தன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் ஆர்.சுந்தர் ராஜன், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கானா பாலா உட்பட பல திரையுலக பிரபலங்க்ள் கலந்துகொண்டனர். விழாவில் திரையிடப்பட்ட படத்தின் அத்தனை பாடல்களும் விழாவுக்கு வந்திருந்த ‘விஐபி’க்களின் பாராட்டு பெறும் வகையில் இனிமையான பாடல்களாக அமைந்திருந்தது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;