இளையராஜா இசையில் விஜய் ஆன்டனி பாடல்!

இளையராஜா இசையில் விஜய் ஆன்டனி பாடல்!

செய்திகள் 15-Nov-2014 9:53 AM IST VRC கருத்துக்கள்

பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் தற்போது இயக்கி வரும் படம் ‘டூரிங் டாக்கீஸ்’. சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்திற்காக இளையராஜா இசையில் இசை அமைப்பாளரும், நடிகரும், பாடகருமான விஜய் ஆன்டனி ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதிவு நேற்று நடந்தது. இளையராஜா இசையில் இன்னொரு இசை அமைப்பாளர் பாடலை பாடுவது அரிதான் விஷயம். அது எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்திற்காக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;