மோகன்லால், அமிதாப், விக்ரம், ஐஸ்வர்யா ராய் இணையும் படம்?

மோகன்லால், அமிதாப், விக்ரம், ஐஸ்வர்யா ராய் இணையும் படம்?

செய்திகள் 14-Nov-2014 2:00 PM IST VRC கருத்துக்கள்

ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாஹுபலி’. இந்திய சினிமா சரித்திரத்தில் இதுவரை எந்தப் படத்திற்கும் செலவு செய்யாத வகையில் இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டை மிஞ்சும் வகையில் மலையாளத்தில் மகாபாரத கதை பின்னணியில் ஒரு பிரம்மாண்ட படம் உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது. மகாபாரத கதையில் பீமன் கேரக்டர் மிக முக்கியமானது. இந்த கேரக்டரை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கவிருப்பதாகவும், இப்படத்தில் பீமனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மோகன்லாலுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பீஷ்மராகவும், கோலிவுட் ஸ்டார் விக்ரம் அர்ஜுனனாகவும், டோலிவுட் ஸ்டார் நாகார்ஜுனா யுதிஷ்டிரராகவும், திரௌபதியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதைப் போல இப்படத்தின் திரைக்கதையை மலையாளத்தின் பிரபல திரைக்கதை ஆசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுத, ஸ்ரீகுமார் இயக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலாக மிகப் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறார்களாம். இந்த படத்திற்கு இசை அமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் சம்பந்தமாக இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;