மம்முட்டியுடன் இணையும் நயன்தாரா!

மம்முட்டியுடன் இணையும் நயன்தாரா!

செய்திகள் 14-Nov-2014 12:07 PM IST VRC கருத்துக்கள்

கேரளாவை சேர்ந்தவர் நயன்தாரா என்றாலும் தனது தாய் மொழியில் விரல்விட்டு எண்ணக் கூடிய படங்களிலேயே நடித்துள்ளார் நயன்தாரா! ஏற்கெனவே மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நயன்தாரா மீண்டும் அவருடன் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய சித்திக், தமிழில் ‘ஃப்ரென்ட்ஸ்’, ‘காவலன்’ உட்பட பல படங்களை இயக்கியிருப்பதோடு ஹிந்தியிலும் படங்களை இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் சித்திக் இயக்கி வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ படம்தான் தமிழில் ‘காவலன்’ என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. ‘பாடிகார்ட்’ படத்தில் நயன்தாரா தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

‘பாடிகார்ட்’ படத்திற்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் சித்திக் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா! சூர்யாவுடன் ‘மாஸ்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, ‘ஜெயம்’ ரவியுடன் ‘தனியொருவன்’ மற்றும் பல படங்களில் படு பிசியாக நடித்து வரும் நயன்தாரா நான்கு வருடங்களுக்கு பிறகு நடிக்கும் மலையாள படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;