‘கத்தி’ ரகசியங்களை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

‘கத்தி’ ரகசியங்களை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 14-Nov-2014 11:35 AM IST Chandru கருத்துக்கள்

தொடர்ந்து 4 வாரங்களாக ‘பாக்ஸ் ஆபிஸி’ல் முதல் இடத்தில் இருக்கிறது விஜய்யின் ‘கத்தி’. ‘துப்பாக்கி’ அளவுக்கு ‘கத்தி’க்கு விமர்சனங்கள் கிடைக்கவில்லையென்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதித்திருப்பதாக ‘கத்தி’ படக்குழு சந்தோஷத்திலிருக்கிறது. நேற்று ‘துப்பாக்கி’ ரிலீஸ் தினத்தை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடினார்கள். ரசிகர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் ‘கத்தி’ படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவை...

* ‘கத்தி’ படத்தின் முதல் ‘கிளாப்’பை அடித்தது படத்தின் சண்டை இயக்குனரான அனல் அரசு மாஸ்டராம்.

* பொதுவாக ஒரு படத்தின் முதல் காட்சியை பகலிலேயே படமாக்குவது கோடம்பாக்கத்தின் சென்டிமென்ட். ஆனால் ‘கத்தி’ படத்தின் முதல் நாள் ஷுட்டிங்கை இரவு நேரத்தில் ஆரம்பித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

* ‘கத்தி’ படத்தின் க்ளைமேக்ஸில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நடிகர் விஜய் பரபரப்பாக பேசுவார். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் இடம்பெறும் இந்த காட்சியை வெறும் 2 மணி நேரத்திலேயே படம்பிடித்து விட்டார்களாம். அதிலும் விஜய் இந்த காட்சியில் ‘சிங்கிள் டேக்’கில் நடித்து முடித்து யூனிட்டிலிருந்தவர்களை அசத்தினாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;