சல்மான் - முருகதாஸ் சந்திப்பு! ‘கத்தி’ ரீ-மேக்கா?

சல்மான் - முருகதாஸ் சந்திப்பு!  ‘கத்தி’ ரீ-மேக்கா?

செய்திகள் 14-Nov-2014 11:31 AM IST VRC கருத்துக்கள்

பல சர்ச்சைகள் ஏற்படுத்தி சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விஜய்யின் ‘கத்தி’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகவிருப்பதாகவும், இப்படத்தில் சல்மான் கான் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸே ஹிந்தி ரீ-மேக்கையும் இயக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸும், சல்மான்கானும் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் ‘கத்தி’ ரீ-மேக்கில் அக்‌ஷய் குமாரும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆமீர்கானை வைத்து ‘கஜினி’யின் ஹிந்தி ரீ-மேக்கை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி’ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான ‘ஹாலிடே’யில் அக்‌ஷய் குமாரை நடிக்க வைத்து இயக்கியிருந்தார். விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் சல்மான்கான் தான் நடித்திருந்தார். இப்படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;