40 நாளில் விஷாலின் ‘ஆம்பள’ ரெடி!

40 நாளில் விஷாலின் ‘ஆம்பள’ ரெடி!

செய்திகள் 14-Nov-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

‘சொல்லி அடிப்பதில் கில்லி’ என்பதை தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் மூலமும் நிரூபித்து வருகிறார் நடிகர் விஷால். ‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’ என வரிசையாக சொன்னபடி ரிலீஸ் செய்த விஷால், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆம்பள’ படத்தையும் சொன்னபடியே பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்காக பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா என 3 நாயகிகளுடனும், ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என அவர்களின் 3 அம்மாக்களுடனும் கலகலப்பாக உருவாகி வருகிறது ‘ஆம்பள’. இவர்களோடு வைபவ், பிரபு, ஸ்ரீமன், கௌதம், அபிஷேக், சந்தானம் என வழக்கம்போல் சுந்தர்.சியின் படை பட்டாளங்கள் இப்படத்திலும் இருக்கின்றன.

கும்பகோணம், ஊட்டி, பொள்ளாச்சி என பரபரப்பாக படமாக்கப்பட்டு வந்த ‘ஆம்பள’ படம் இன்னும் 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவிருக்கிறதாம். படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலேயே அந்தந்த காட்சிகளுக்கான எடிட்டிங் வேலைகளையும் அவ்வப்போது முடித்துவருவதால் திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் எந்த குளறுபடியும் ஏற்படாதவாறு பார்த்து வருகிறது சுந்தர்.சி & விஷால் கூட்டணி.

இப்படத்தின் மூலம் ‘ஹிப் ஹாப் தமிழ’ ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாகியிருப்பதால் ‘ஆம்பள’ படத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;