விஜய் சேதுபதியை மிரட்டினேனா? – ‘ஸ்டூடியோ 9’ சுரேஷ்

விஜய் சேதுபதியை மிரட்டினேனா? –  ‘ஸ்டூடியோ 9’ சுரேஷ்

செய்திகள் 14-Nov-2014 11:01 AM IST VRC கருத்துக்கள்

‘வசந்தகுமாரன்’ படம் சம்பந்தமாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை தொடர்பாக ‘ஸ்டுடியோ 9 புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

‘‘இன்று (13-11-14) மதியம் திரு.விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் ஆகிய நான் அவரை மிரட்டியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறியுள்ளதை கண்டு மிக அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவே இந்த அறிக்கையை வெளியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். நானும் திரு விஜய் சேதுபதி அவர்களும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த கணோம்’ திரைப்படம் வெளிவந்த பத்தாவது நாளில் ‘ஸ்டூடியோ 9’ தயாரிப்பு நிறுவனத்துக்காக திரு.விஜய் சேதுபதி அவர்கள் ‘வசந்தகுமாரன்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக எங்களால் முதன் முறையாக அவருக்கு ரூபாய் ஒரு கோடி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு, (ஒப்பந்த நாள் 14 ஜனவரி 2013) ரூபாய் பத்து லட்சம் முன் பணமாக கொடுத்தோம்.

எங்கள் திரைப்படத்தில் டிசம்பர் 2013-ல் நடிப்பதாக கூறினார். டிசம்பர் 2013-ல் கேட்டதற்கு அவரின் குருநாதர் திரு.சீனுராமசாமி அவர்களின் திரைப்படத்தில் நடிப்பதால் அதனை முடித்த பிறகு எங்கள் திரைப்படம் செய்து கொடுப்பதாக என்னிடம் கூறினார். நண்பர் என்ற முறையில் நானும் விட்டுக் கொடுத்தேன். இதற்கிடையில் ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்திற்காக அலுவலகம் அமைத்து ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்க கூறினார். அவர் சொல்லின்படி அலுவலகம் அமைத்து ப்ரீ புரொடகஷன் வேலைகளை தொடங்கினோம். அலுவலகம் அமைத்து ஆறு மாதங்கள் கழித்து கேட்டதற்கு, நான் நடித்துகொண்டு இருக்கும் படங்கள் தாமதம் ஆகி வருவதாலும், ‘வசந்தகுமாரன்’ திரப்படத்திற்கு உடம்பை குறைத்து, தாடியை எடுத்து கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டி இருப்பதால் தனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று கூறியதால் அதற்கும் எவ்வித மறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்தோம்.

இதனிடையில், திரு. தனுஷ் அவர்கள் தயாரிக்கும் ‘நானும் ரௌடி தான்’ என்ற திரைப்படத்தில் திரு. விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பதாக செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்ச்சி அடைந்தேன். எனினும் திரு.தனுஷ் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் NO OBJECTION CERTIFICATE என்று சொல்லப்படும் NOC-யை திரு. தனுஷ் அவர்களுக்கும் திரு. விஜய் சேதுபதி அவர்களுக்கும் அனுப்பி வைத்தோம். பிறகு எனது இணை தயாரிப்பாளர் திரு.நாசர் அவர்களை திரு.விஜய் சேதுபதி அவர்கள் தொடர்பு கொண்டு தனக்கு இந்த NOC தேவையில்லை என்றும் தனக்கு ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம என்று கூறி உள்ளார்.

இது சம்பந்தமாக பேச நானும் எனது இணை தயாரிப்பாளர் திரு.நாசர் அவர்களும் திரு.விஜய் சேதுபதியை சந்தித்தபொழுது தனக்கு ‘வசந்தகுமாரன்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றும், தன்னை இந்த திரைப்படத்தில் இருந்து விடுவிக்கும் படியும், ப்ரீ புரொடக்‌ஷனுக்கு ஆன செலவுகள் உட்பட (அலுவலகம் அமைத்தது, முன் பணம் கொடுத்தது, இன்னும் பல…) அனைத்திற்குமாக சேர்த்து ரூபாய் 2 கோடி தருவதாகக் கூறி 1 அல்லது 2 வருடங்கள் கழித்து தான் இந்த படத்தில் நடித்து தருவதாகவும் அவராக எங்களிடம் கூறினார். இவைகள் தான் ‘வசந்தகுமாரன்’ தொடர்பாக நடந்த உண்மைகள். ஆனால் நாங்கள் அவரை மிரட்டுவதாகவும், அவரிடம் பண்ம் கேட்டு வற்புறித்தியதாகவும் கூறி இருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறான விஷயம். இதனால் எனது சமூக மதிப்பிற்கு மிகப் பெரிய பாதிப்பும் தொழில ரீதியாக எனக்கு மிக பெரிய பாதிப்பும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் எனது தரப்பு உண்மைகளை இந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;