லிங்குசாமி, பார்த்திபன் இணைந்த ‘நவம்பர் 14’

லிங்குசாமி, பார்த்திபன் இணைந்த ‘நவம்பர் 14’

செய்திகள் 14-Nov-2014 10:47 AM IST Chandru கருத்துக்கள்

இந்த 2014ஆம் வருடம் இயக்குனர்களாக லிங்குசாமிக்கும், ரா.பார்த்திபனுக்கும் மறக்க முடியாத வருடம்.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜெயித்துக் கொண்டிருந்த ரா.பார்த்திபன் ஒரு சிறு சறுக்கலுக்குப்பின் தன்னை மீண்டும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் மீட்டெடுத்தார். இன்றைய இளம் இயக்குனர்களுடன் போட்டி போடும் வகையில் அமைந்திருந்தது அவரின் இந்தப் படம். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் பார்த்திபனின் இந்த இரண்டாவது இன்னிங்ஸை வெகுவாக வரவேற்றிருக்கிறார்கள். அந்த உற்சாகத்தில் தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

‘ஆனந்தம்’ படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியோடு தமிழில் இயக்குனராக அறிமுகமான என்.லிங்குசாமி, அதனைத் தொடர்ந்து இயக்கிய ‘ரன்’ படத்தையும் சூப்பர்ஹிட்டாக மாற்றினார். அதன்பிறகு ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை என தமிழின் முன்னணி ஹீரோக்களை இயக்கினார். இந்த வருடம் அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அஞ்சான்’ படம் வெளிவந்தது. விமர்சனரீதியாக இப்படம் பலதரப்பட்ட கருத்துக்களை சந்தித்திருந்தாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அனைவரையும் மலைக்க வைத்தது. படத்தின் மீதிருந்த அதிகப்படியான எதிர்பார்ப்பே இப்படத்திற்கு பின்னடைவாகவும் மாறியதுதான் சோகம். வெற்றி, தோல்வி என்பது சினிமாவைப் பொறுத்தவரை சகஜம். இதோ.... தன்னுடைய அடுத்த படத்திற்காக தற்போது கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இயக்குனராக மட்டுமல்லாமல் தனது ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’, ‘கோலி சோடா’, ‘சதுரங்க வேட்டை’ என தமிழின் முக்கியமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் உள்ளார் லிங்குசாமி.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான லிங்குசாமிக்கும், பார்த்திபனுக்கும் இன்று (நவம்பர் 14) பிறந்தநாள். புதிதாய் பிறந்திருக்கும் இந்த வருடத்தில் அவர்கள் இருவரும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க ‘டாப் 10 சினிமா’ சார்பாக வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;