‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’ போலீஸாக விவேக்!

‘சால்ட் அன்ட் பெப்பர்லுக்’ போலீஸாக விவேக்!

செய்திகள் 14-Nov-2014 9:58 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் ‘சால்ட் அன்ட் பெப்பர்லுக்’ ஸ்டைல் எவ்வளவு பாப்புலரோ, அதே அளவுக்கு தற்போது நடிகர் விவேக்கின் சால்ட் அன்ட் பெப்பர்லுக் கெட்அப்பும் இணையதளங்களில் ஃபேமஸ் ஆகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்...’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார் விவேக். இதில் நான்கு வித்தியாசமான கெட்அப்களில் அஜித் நடிக்க, முதல்முறையாக ‘சால்ட் அன்ட் பெப்பர் லுக்’கில் தோன்றியிருக்கிறார் விவேக். தன்னை இப்படி மாற்றியதில் அஜித்திற்குத்தான் முக்கியப்பங்கு என விவேக்கே கூறியிருக்கிறார்.

அதேபோல் அஜித்தைப்போலவே இப்படத்தில் விவேக்கிற்கும் போலீஸ் வேடம்தானாம். ஆனால் அதற்காக ‘சிங்கம்’ படத்தின் ‘ஏட்டு எரிமலை’யைப்போல் ‘என்னை அறிந்தால்...’ விவேக்கின் போலீஸ் கேரக்டர் இருக்கும் என எண்ணிவிட வேண்டாம். வழக்கமாக கௌதம் படத்தின் போலீஸ் கேரக்டர்கள் எல்லாமே ரொம்பவும் சீரியஸாகவே பயணிக்கும். ஆனால், இதில் விவேக்கின் போலீஸ் கேரக்டர் சீரியஸாக படைக்கப்பட்டிருந்தாலும், அதிலும் தன்னுடைய ஹுயூமர் சென்ஸை ஆங்காங்கே காட்டி ரசிகர்களை சிரிக்க வைப்பாராம் விவேக்.

மொத்தத்தில் விவேக்கின் போலீஸ் கேரக்டர் கொஞ்சம் சீரியஸ்... கொஞ்சம் சிரிப்பு என்ற விகிதத்தில் இருக்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;