‘தொப்பி’யில் அறிமுகமாகும் ரக்‌ஷா ராஜ்!

‘தொப்பி’யில் அறிமுகமாகும் ரக்‌ஷா ராஜ்!

செய்திகள் 13-Nov-2014 5:03 PM IST VRC கருத்துக்கள்

‘ராயல் ஸ்க்ரீன்ஸ்’ தயாரிக்கும் படம் 'தொப்பி' இப்படத்தை யுரேகா இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ரக்க்ஷா ராஜ் கேரளாவை சேர்ந்தவர். இவர் பரத நாட்டியம் , குச்சி புடி,மோகினி ஆட்டம் என பல நடன கலைகளில் பயிற்சி பெற்றுள்ளார். சமூக துறை சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றுள்ள ரக்க்ஷா அந்த கல்வியின் அடிப்படையில் மலையாள கலாசார துறை மற்றும் கலை நிலையம் மூலம் தனது நடிப்பு ஆற்றலை வெளி படுத்தியுள்ளார். தமிழ் படங்கள் மீதும் , தமிழ் மீதும் பேரார்வம் கொண்டவர் ரக்க்ஷா ராஜ். இவர் தனது முதல் தமிழ் படமான ‘தொப்பி’யில் நடித்த அனுபவம் குறித்து பேசும்போது,

‘‘ தொப்பி என் மனத்தைக் கவர்ந்த படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் எனக்கு நல்ல பாடமாக இருந்தது. என்னுடைய சுய நம்பிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருந்தது. பட குழுவினர் ஒரு குடும்பம் போல் என்னிடம் பாசம் பாராட்டியதை என்னால் மறக்க முடியாது. திரை உலகில் மென்மேலும் சாதிக்க நினைக்கும் எனக்கு 'தொப்பி' மூலம் தமிழ் சினிமாவில் நல்ல பெயரும் பாராட்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தொப்பி - டிரைலர்


;