சிம்போனி இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

சிம்போனி இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 13-Nov-2014 4:45 PM IST VRC கருத்துக்கள்

இன்றைய தமிழ் சினிமாவின் இசை அமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் தனி ஒரு இடம் உண்டு! படங்ளுக்கு இசை அமைத்து வருவதோடு, பட தயாரிப்பு, நடிப்பு ஆகிய துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் விரைவில் சிம்போனி இசைக்காக ஜெர்மனி செல்லவிருக்கிறார்.

‘‘சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர் பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் சோபிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனக்கு நன்றி. ஜெர்மனியில் உள்ள Stuttgart என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசை பதிவுக்காக நான் விரைவில் ஜெர்மனி செல்ல உள்ளேன்.

இசை உலகில் பிரசித்தி பெற்ற பலர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவர்களில் மிக முக்கியமானவர் கோன்ராத் பௌமன். இவரது இசை காற்றில் பறந்த ஜேர்மனி நாட்டில் நானும் இசை அமைக்க இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை’’ என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பென்சில் - டிரைலர்


;