‘கயல்’ மூலம் கதாநாயகனான சத்யம் தியேட்டர் ஊழியர்!

‘கயல்’ மூலம் கதாநாயகனான சத்யம் தியேட்டர் ஊழியர்!

செய்திகள் 13-Nov-2014 3:19 PM IST VRC கருத்துக்கள்

‘கும்கி’ படத்தின் மூலம் விக்ரம் பிரபுவை அறிமுகபப்டுத்திய பிரபு சாலமன் தற்போது இயக்கி வரும் ‘கயல்’ படத்தில் சந்திரன் என்ற இளைஞரை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு பக்கத்து வீட்டு பையன் மாதிரி ஒரு முகம் தேவைப்பட்டதாம்! அப்படி தேடியபோது கிடைத்தவராம் சந்திரன்! ஏற்கெனவே நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு குறும் படத்தில் நடித்துள்ள சந்திரன் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரிலும் பணியாற்றியுள்ளார். இந்த தியேட்டரில் தான் சந்திரனின் முதல் படமான ‘கயல்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் இன்று காலை நடந்தது. ஏராளமான திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் தான் பணியாற்றிய தியேட்டரிலேயே தான் நடித்த முதல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி என்கிறார் சந்திரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;