300 திரையரங்குகளில் டிசம்பர் ரிலீஸாக வரும் ‘கயல்’

300 திரையரங்குகளில் டிசம்பர் ரிலீஸாக வரும் ‘கயல்’

செய்திகள் 13-Nov-2014 12:19 PM IST Chandru கருத்துக்கள்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், காட் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘பொறியாளன்’ ஆனந்தி நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் வி.மகேந்திரன். இப்படம் குறித்து இயக்குனர் பிரபு சாலமன் கூறும்போது,

‘‘இது முழுக்க முழுக்க காதல் படம் தான். ஒரு சின்னஞ்சிறிய அறைக்குள்ளேயே தனது வாழ்க்கையை என எந்தவித பொழுதுபோக்கு விஷயங்களும், டி.வி விஞ்ஞான வளர்ச்சி தெரியாத ஒரு பெண் கயல். அப்படிப்பட்ட பருவ வயதில் அவளை சந்திக்கும் ஒருவனின் உணர்வுபூர்வமான சொற்கள் - அவள் மனதில் ஏற்படுத்திய மாற்றம், அது காதலா என்று கூட உணர முடியாத பக்குவம், அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அதுவும் தன்னை பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள், கயலை அவனை நோக்கி ஈர்க்கிறது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் உலக வரலாற்றில் கருப்புதினமாக உணரப்பட்டது. அந்த 2004 ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் ‘கயல்’. அவன் யார்? எங்கே இருப்பான் என்று கூட தெரியாமல் அவனைத் தேடி அவள் போன காதல் பதிவுதான் ‘கயல்’. உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்திப்படுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறோம்.

படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப் பட்டிருக்கிறோம். பத்து வினாடிகளே இடம்பெறும் ராஜஸ்தான் காட்சிகள் - மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரப்புஞ்சி போனோம். லே, லடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டுமே தேவைக்காக படமாக்கினோம். படத்தில் சவுண்டுக்கான முக்கியத்துவத்தை இதில் உணர்வீர்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். வருகிற டிசம்பர் மாதம் 300 தியேட்டர்களுக்கு மேல் கயல் படம் வெளியாக உள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;