‘துப்பாக்கி’ ரிலீஸைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

‘துப்பாக்கி’ ரிலீஸைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

செய்திகள் 13-Nov-2014 11:08 AM IST Chandru கருத்துக்கள்

போஸ்டர் அடித்தல், கட்அவுட் வைத்தல் என்பதெல்லாம் படம் ரிலீஸின்போது மட்டுமே... மற்ற நேரங்களில் தங்களின் பலத்தைக் காட்டுவதற்கு ரசிகர்கள் பயன்படுத்துவது ‘ட்விட்டர் டிரென்ட்’ எனும் ஆயுதத்தைத்தான். அதிலும் விஜய், அஜித் ரசிகர்களே இந்த வேலையை அதிகமாகச் செய்து வருகிறார்கள். இன்று... விஜய் ரசிகர்கள் ‘துப்பாக்கி’ படம் ரிலீஸாகி 2 ஆண்டுகள் ஆனதை சந்தோஷமாக ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

எத்தனை ஹிட் படங்களை விஜய் கொடுத்திருந்தாலும், விஜய் ரசிகர்களிடம் அவரின் கேரியரிலேயே உங்களுக்குப் பிடித்த படம் எது என்று கேட்டால், சட்டென்று ‘துப்பாக்கி’யைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அந்தளவுக்கு ‘துப்பாக்கி’ படம் இளையதளபதி ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தவிர தமிழ் சினிமாவில் ‘எந்திரனு’க்குப் பிறகு 100 கோடி ரூபாய் வசூலித்த படம் என்றும் ‘துப்பாக்கி’யைச் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக இப்படத்தில் விஜய் ஏற்றிருந்த ‘ஜெகதீஷ்’ கேரக்டரும், அவர் பேசிய ‘ஐயாம் வெயிட்டிங்...’ என்ற வசனத்தையும் எப்போதும் மறக்க மாட்டார்கள். விஜய்யின் ஸ்டைலிஷான கேரக்டர், பவர்ஃபுல் வில்லன், ஹாரிஸின் மாஸ் பிஜிஎம், சூப்பர்ஹிட் பாடல்கள், ஏ.ஆர்.முருகதாஸின் வேகமான திரைக்கதை என ஒரு ‘பிளாக்பஸ்டர்’ படத்திற்கான அத்தனை அம்சங்களும் ‘துப்பாக்கி’யில் சரிவிகிதத்தில் கலந்திருந்தன.

தங்கள் ஹீரோ ‘இளையதளபதி’யின் சூப்பர்ஹிட் படமான ‘துப்பாக்கி’ ரிலீஸான இன்றைய தினத்தில் (நவம்பர் 13) #2YearsSinceTHUPPAKKIStorm என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரென்டில் வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இது உலகளவிற்கு சொல்லுமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;