‘மெய்மறந்தேன்’ படக்குழுவினருக்கு ஆர்.சுந்தர்ராஜன் பாராடு!

‘மெய்மறந்தேன்’ படக்குழுவினருக்கு ஆர்.சுந்தர்ராஜன் பாராடு!

செய்திகள் 13-Nov-2014 10:12 AM IST VRC கருத்துக்கள்

‘‘அந்த காலத்தில் ஐந்தாயிரம் பேர் ஒரு படத்தை பார்த்தாலே போதும், அது வெற்றிப் படமாகி விடும். ஆனால் இந்த காலகட்டத்தில் 50 லட்சம் பேர் ஒரு படத்தை பார்த்தாலும் அந்த படம் ஜெயிப்பதில்லை, அப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு லாபம் வருவதில்லை. அன்றைக்கு தியேட்டரில் மட்டும் தான் படம் பார்க்க முடிந்தது. ஆனால் இன்று எது எதிலையோ படத்தை பார்க்கிறார்கள். அப்படியிருக்கும்போது எப்படி போட்ட பணம் திரும்பி வரும்? இப்படியான சூழ்நிலையிலும் படங்களை தயாரிக்க வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களுக்கு சினிமா எனும் கலை மீதுள்ள காதல் தான் காரணம்.

ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் மிக முக்கியம. அந்த வகையில் ‘மெய் மறந்தேன்’ படப் பாடல்கள் சூப்பராக அமைந்துள்ளன’’ என்றார் பல வெள்ளிவிழா படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன். ‘சி.ஜி.எம்.பிக்சர்ஸ்’ சார்பில் ஜி.மணிவண்ணன் தயாரித்துள்ள ‘மெய் மறந்தேன்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் ஆர்.சுந்தர்ராஜன் இப்படி பேசினார்.

அரவிந்த ரோஷன், சானியாதாரா ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு கே.ஆர்.கெவின் சிவா இசை அமைத்துள்ளார். இவர் பாடலாசிரியர் பிறைசூடனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலரை நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனும், ‘கலைப்புலி’ ஜி.சேகரனும் இணைந்து வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அத்தனை திரையுலக பிரமுகர்களும் படக்குழுவினரை பாராட்டினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;