‘லிங்கா’ படத்திற்கு தடையா?

‘லிங்கா’ படத்திற்கு தடையா?

செய்திகள் 12-Nov-2014 5:18 PM IST Chandru கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கும் ‘லிங்கா’ படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 16ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான பாடல்களையும், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்களான ‘ராக்லைன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவன்தார்.

இந்நிலையில் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரவி ரத்னம் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், ‘முல்லைவனம் -999’ என்ற தன் கதையை திருடிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, 2013ஆம் ஆண்டே தனது கதையை ‘யு டியூப்’பில் பதிவேற்றம் செய்ததாகவும், ஆனால் ‘லிங்கா’ படத்திற்கு இந்த வரும் பிப்ரவரி மாதம்தான் பூஜை போடப்பட்டுள்ளதாகவும் ரவிரத்னம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். எனவே கதையின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், படத்திற்கும் ‘லிங்கா’ பாடல் வெளியீட்டிற்கும் தடைவிதிக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ரஜினி, கே.எஸ்.ரவிகுமார், ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர்கள் உட்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம். இந்த வழக்கு வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;