விஜய்க்கு நான் வில்லனா? - சுதீப் விளக்கம்

விஜய்க்கு நான் வில்லனா? - சுதீப் விளக்கம்

செய்திகள் 12-Nov-2014 2:58 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படம் குறித்த செய்திகளே இன்னும் ஓய்ந்த பாடில்லை... அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 58’ பற்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஈசிஆரில் நடந்து கொண்டிருக்கிறது. ஹன்சிகாவுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார் எனக்கூறப்படுகிறது. அதேபோல், ‘நான் ஈ’ புகழ் சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் ‘பெங்களூர் மிரர்’ பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார் கன்னட நடிகர் சுதீப். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘இது ஒரு ஃபேன்டஸி படம். இப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு ராஜ்ஜியத்தின் ராணியாக நடிக்கிறார். அந்த ராஜ்ஜியத்தைக் காக்கும் தளபதியாக நான் நடிக்கிறேன். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து இரண்டு மாதமாக ‘அந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்’ என தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். ஒரு நடிகனாக என் மீது அவர்கள் நிறைய மரியாதை வைத்திருந்தார்கள். அதனால் கடைசியில் என் பிடிவாதத்தைத் தளர்த்தி, நடிப்பதற்கு சம்மதித்தேன்.

இப்படத்தில் எனக்கு முழுக்க நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கென சில நல்ல குணங்களும் உண்டு. அதேபோல் தீய குணங்களும் உண்டு. ஒரு சாதாரண வில்லன் கதாபாத்திரமாக இது இருந்திருந்தால் என்னை அவர்கள் அணுகியிருக்கவே மாட்டார்கள்!’’ என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சுதீப்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;