‘விஜய் 58’ - ஹன்சிகா உற்சாகம்!

‘விஜய் 58’ - ஹன்சிகா உற்சாகம்!

செய்திகள் 12-Nov-2014 2:20 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கான ஷூட்டிங் கடந்த 10ஆம் தேதி முதல் சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் ஒன்றில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். ஹன்சிகாவின் அம்மாவாக ஸ்ரீதேவியும், வில்லனாக ‘நான் ஈ’ சுதீப்பும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ‘சதுரங்க வேட்டை’ நாயகன் ‘நட்டி’ நட்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கலை இயக்குனர் முத்துராஜ் அமைத்திருக்கும் செட்டில்தான் தற்போது விஜய், ஹன்சிகா பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஹன்சிகா, இப்படம் குறித்து ‘ட்வீட்’ செய்திருக்கிறார். ‘‘விஜய் 58 பாடல் படப்பிடிப்பு... செட், காஸ்டியூம், தயாரிப்புச் செலவு என எல்லாமே மலைக்க வைக்கிறது... அருமையான தொடக்கம்!’’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;