உதயநிதிக்கு வில்லியான சூசன்!

உதயநிதிக்கு வில்லியான சூசன்!

செய்திகள் 12-Nov-2014 12:13 PM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘நண்பேன்டா’ எனும் படத்தை தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக நடிக்கிறார் நயன்தாரா.

இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஜெகதீஷ் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். வழக்கம்போல் காமெடிக்கு சந்தானமும் இப்படத்தில் இணைந்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடிப் படமாக இல்லாமல் இந்த ‘நண்பேன்டா’ படத்தை காமெடி த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்களாம். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக இருக்கின்றன.

இப்படத்தில் நடிகை சூசன் வில்லியாக நடிக்கிறார் என்ற தகவல் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்திருக்கிறது. ‘தென்றல்’, ‘ஆபிஸ்’ போன்ற டிவி சீரியல்கள் மூலம் புகழ்பெற்ற நடிகை சூசன் ‘மைனா’, ‘ரா ரா’, ‘தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட படங்களில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் வில்லியாக நடித்து வரும் நடிகை சூசனின் கேரக்டரை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். இப்படத்தில் சூசன் சோலோ வில்லியாம்..!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ


;