நவம்பர் 16ல் விஜய், தனுஷ் வெளியிட்ட ‘இசை’ விழா!

நவம்பர் 16ல் விஜய், தனுஷ் வெளியிட்ட ‘இசை’ விழா!

செய்திகள் 12-Nov-2014 11:50 AM IST Chandru கருத்துக்கள்

‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, விஜய்க்கு ‘குஷி’ என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘கள்வனின் காதலி’ என வரிசையாக தானே ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். கடந்த 2012ஆம் வருடம் ‘நண்பன்’ படத்திலும், 2013ஆம் வருடம் வெளிவந்த ‘வில்லா’ படத்திலும் முக்கிய வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது ‘இசை’ எனும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளரும் அவரே.

‘இசை’ படத்தின் பாடல்கள் நாளை கடைகளில் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் இதற்கான வெளியீட்டு விழாவை கடந்த 9ஆம் தேதியே சன் டிவியின் ஸ்டுடியோவில் நடத்தி முடித்துவிட்டார்கள். இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணுவர்தன், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஜய், தனுஷ், சத்யராஜ் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ‘இசை’ படத்தின் பாடல்கள் சிடியை விஜய் வெளியிட அதனை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். இந்த இசை விழா நிகழ்ச்சி சன் டிவியில் வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;