விக்ரம் பிரபுவுடன் இணையும் வடிவேலு!

விக்ரம் பிரபுவுடன் இணையும் வடிவேலு!

செய்திகள் 12-Nov-2014 11:09 AM IST Chandru கருத்துக்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலி ராமன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. அப்படத்தைத் தொடர்ந்து ‘தெனாலிராமன்’ இயக்குனர் யுவராஜ் இயக்கும் ‘எலி’ படத்திற்கான வேலைகளில் தற்போது பிஸியாகவிருக்கும் வடிவேலு, விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் புதிய படமொன்றில் காமெடியனாகக் களமிறங்கவிருக்கிறார். இயக்குனர் எழிலிடம் அசோசியேட் டைரக்டராகப் பணிபுரிந்து வந்த குமாரய்யா என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக புரமோஷன் ஆகவிருக்கிறார். இப்படத்திற்கான ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறதாம். படத்தில் நடிக்கவிருக்கம் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமாம்.

மீண்டும் நடிக்க வந்த வடிவேலு கதாநாயகனாக மட்டுமே நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் காமெடியனாகவும் படங்களில் நடிக்கவிருப்பது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;