சூப்பர்ஸ்டாரை கௌரவித்த மத்திய அரசு!

சூப்பர்ஸ்டாரை கௌரவித்த மத்திய அரசு!

செய்திகள் 12-Nov-2014 10:47 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சமீபத்தில் இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக பல மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னையிலும் இந்த விழா நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் ‘நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த திரை ஆளுமை’ என்ற விருதை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வழங்கவிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்திருக்கிறார்.

கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 45வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முதல் நாளில் ரஜினிக்கான இந்த விருது வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த விழாவில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த திரைப்பட விழாவில் 75 நாடுகள் பங்கேற்விருக்கின்றனவாம். 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் படங்களும், ஆசிய நாடுகளைச் சேர்ந்த 7 படங்களும் இந்த விழாவில் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;