விமல், சூரி, அஞ்சலியின் ‘மாப்பிள்ளை சிங்கம்’

விமல், சூரி, அஞ்சலியின் ‘மாப்பிள்ளை சிங்கம்’

செய்திகள் 12-Nov-2014 10:37 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தைத் தொடர்ந்து விமலும், சூரியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ‘மாப்பிள்ளை சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முழுநீள காமெடிப் படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மதன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இந்த ஜோடி ‘மாப்பிள்ளை சிங்கம்’ படத்தில் இணைந்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ட்ரைலர்


;