‘மாஸ்’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘24’

‘மாஸ்’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘24’

செய்திகள் 12-Nov-2014 10:19 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் கே.குமார் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே தமிழில் சிம்பு நடித்த ‘அலை’ மற்றும் மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார். நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘மனம்’ தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழ்ப் படத்தை இயக்கவிருக்கிறார் விக்ரம் குமார். இந்தப் படத்திற்கு ‘24’ என்ற டைட்டிலை வைக்கலாமா என பரீசீலித்து வருகின்றனராம். சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே இப்படத்தை தயாரிக்கிறது.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தைத் தொடர்ந்து சூர்யா & ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இந்த ‘24’ படத்தின் மூலம் இணையவிருக்கின்றனர். ஒளிப்பதிவுக்கு வினோத் குமார், கலைக்கு ராஜீவன் என்று இப்படத்திற்கான வேலைகளில் இப்போது படு பிசியாக இயங்கி வருகிறார் விக்ரம் கே.குமார். ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;