‘வஜ்ரம்’ படக்குழுவினர் நடத்தும் மரத்தான் போட்டி!

‘வஜ்ரம்’ படக்குழுவினர் நடத்தும் மரத்தான் போட்டி!

செய்திகள் 11-Nov-2014 4:22 PM IST VRC கருத்துக்கள்

‘காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம், இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்’ என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘வஜ்ரம்’. இக்கருத்து அனைத்து மக்களிடமும் போய் சேரவேண்டும் என்ற அல்ல நோக்கத்தில் இப்படக் குழுவினர் ஒரு மரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டி குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறவிருக்கிறது. மெரீனாவில் உள்ள அண்ணா சதுக்கத்திலிருந்து துவங்கும் இப்போட்டி கலங்கரை விளக்கத்தில் முடிகிறது. இப்போட்டியில் சென்னையிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்று ‘வஜ்ரம்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புறம்போக்கு - மரினா பீச்சில பாடல் வீடியோ


;