மீண்டும் ஸ்கூலுக்கு போகும் அமலாபால்!

மீண்டும் ஸ்கூலுக்கு போகும் அமலாபால்!

செய்திகள் 11-Nov-2014 11:03 AM IST Chandru கருத்துக்கள்

‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் குடிபுகுந்த அமலா பால், சமீபத்தில் இயக்குனர் விஜய்யை திருமணம் முடித்து அவரின் இல்லத்திற்குள் குடி புகுந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தையெல்லாம் ஏற்படுத்தாமல் அடுத்த ரவுண்டுக்கு அதிரடியாகத் தயாராகிவிட்டார் அம்மணி. ‘மைனா’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவர், தற்போது மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடிக்கும் ‘மிலி’ படத்திலும் மீண்டும் ஸ்கூலுக்குப் போகவிருக்கிறார். ‘டிராபிக்’ படப்புகழ் ராஜேஷ் பிள்ளை இயக்கும் இப்படத்தின் டைட்டிலான ‘மிலி’ என்ற கேரக்டரில் பள்ளி மாணவியாக அமலா பால் நடிக்கிறார்.

எடிட்டர் மகேஷ் நாராயணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைக்க, ‘ஆர்டினரி ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் சதீஷ் பி சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிஷ் லால் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான், கோபி சுந்தர் இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;