‘கத்தி’ தெலுங்கு வெர்ஷனுக்கு ‘கத்திரி’!

‘கத்தி’ தெலுங்கு வெர்ஷனுக்கு ‘கத்திரி’!

செய்திகள் 11-Nov-2014 9:59 AM IST Chandru கருத்துக்கள்

12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக கத்தி குழுவினரால் அறிவிக்கப்பட்ட ‘கத்தி’ படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் இன்னும் வெளியாகவில்லை. டப்பிங் வேலைகள் இருந்ததாலும், படத்தை தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருந்ததாலும்தான் இந்த தாமதம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள ‘கத்தி’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் ‘இளையதளபதி’ விஜய் பங்கேற்கவிருக்கிறார் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் ‘கத்தி’ படம் 2 மணி 46 நிமிட நேரம் ஓடியது. ஆனால் இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ‘கத்திரி’ போடப்பட்டுள்ளதாம். இதனை தெலுங்கு ‘கத்தி’யை வாங்கியுள்ள தயாரிப்பாளர் தாகூர் மது தெரிவித்துள்ளார். படம் வரும் நவம்பர் 21ஆம் தேதியோ அல்லது 28ஆம் தேதியோ வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;