நடிகர் ரஞ்சித் - நடிகை ராகசுதா திருமணம்!

நடிகர் ரஞ்சித் - நடிகை ராகசுதா திருமணம்!

செய்திகள் 11-Nov-2014 9:52 AM IST Chandru கருத்துக்கள்

1993ஆம் ஆண்டு வெளிவந்த ‘பொன் விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். குணசித்திர வேடம், ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரஞ்சித், நடிகை ப்ரியா ராமனை திருமணம் செய்து கொண்டார். ப்ரியா ராமனுடனான தனது 15 ஆண்டு கால திருமண வாழ்க்கையை விவாகரத்துப் பெற்று முடித்து கொண்டார். அவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.

தற்போது, நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான கே.ஆர்.சாவித்திரியின் மகளான நடிகை ராகசுதாவை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ரஞ்சித். ராமராஜனின் ‘தங்கத்தின் தங்கம்’ படம் மூலம் 1990ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகசுதா. ரஞ்சித் & ராகசுதாவின் திருமணம் நேற்று (நவம்பர் 10) சென்னை, திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில், இருவீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆளுக்கு பாதி 50-50 - டீசர்


;