நடிகர் சிவகுமார் வரைந்த பத்மினி ஓவியம்

நடிகர் சிவகுமார் வரைந்த பத்மினி ஓவியம்

கட்டுரை 10-Nov-2014 6:24 PM IST Top 10 கருத்துக்கள்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது, புதையல், அமரதீபம், உத்தமபுத்திரன் - பள்ளி நாட்களில் நான் பார்த்தது.
காதலன், காதலியாக நடித்த அந்த நாளிலேயே - 'மங்கையர் திலகம்' படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக நடித்தார் பத்மினி.
அந்நாளில் எம்.ஜி.ஆர்- பானுமதி, சிவாஜி -பத்மினி, ஜெமினி - சாவித்ரி, நிரந்தர திரையுலக ஜோடிகள். சிவாஜி - பத்மினியை என் இதயக்கூட்டில் பதித்துக்கொண்டேன்.

'மதுரை வீரன்' படத்தில் எம்.ஜி.ஆர் உடன் நடிக்கப் போய்விட்டார் என்று ஒரு வருடம் அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் என் கோபத்தை வெளிப்படுத்தினேன்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் உச்ச கட்ட நடனக் காட்சி, தில்லான மோகனாம்பாள் திருவருட்செல்வர் படங்களில் தேர்ந்த நாட்டியத் தாரகையாக என்று நிரூபித்தவர்.
நடிப்பில் மட்டுமல்ல குணத்திலும் அவர் நிறைகுடம். எம்.ஜி.ஆர், சிவாஜி , ஜெமினி என மும்மூர்த்திகளோடு நடித்த போதும் ஒருவரைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்கூட புறம் பேசாத பத்தரை மாற்றுத் தங்கம்.
ஓவியனாக வாழ்கையை தொடர நினைத்த நான் நடிகனாக பின் ஏ.பி.என். படங்களில் - புராண வேடங்களில் நடித்த பொழுது பத்மினியுடன் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை.
ஜெமினியின் 'விளையாட்டுப் பிள்ளை', சஷ்டி பிலிம்ஸ் தேரோட்டம் படங்களில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

1958-இல் மோகன் ஆர்ட்ஸ்-ல் 16வது வயதில் பயிற்சி ஓவியனாக இருந்த பொழுது நான் வரைந்த பத்மினியின் ஓவியத்தை ஒரு நாள் அவருக்கு பரிசளித்தேன்.
அந்த நாட்டியப் பேரொளி அணைந்த செய்தி கேட்டு ஷோபனா வீட்டுக்கு சென்றேன். கண்ணாடிப் பேழைக்குள் சிரித்தவாறு துயில் கொண்டிருந்தார்.
தலைமாட்டில் நான் வரைந்த பத்மினி ஓவியம் அருகே குத்துவிளக்கு, அணையாத ஜோதியாக ஒழி உமிழ்ந்தது. கண்கள் குளமாகிவிட்டன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;