கார்த்திக் சுப்புராஜின் புதிய முயற்சி!

கார்த்திக் சுப்புராஜின் புதிய முயற்சி!

செய்திகள் 10-Nov-2014 2:05 PM IST VRC கருத்துக்கள்

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்நிறுவனம் படைப்பாளர்களையும், குறும்பட இயக்குனர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும் மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமாகும்.

திரைப்படம் மற்றும் அதன் படைப்பு சார்ந்த தொழில்நுட்பத்திலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் கற்றுக்கொண்ட பாடமும், பெற்ற அனுபவத்தையும் வைத்து கலைத்துறையில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி வாய்ப்புகளை உணர்ந்து அதை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தனது நண்பர்களுடன் இந்நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதன் அடிப்படையில் Bench Flix, Bench Cast, Bench Subs என பல பிரிவுகளிலாக இந்நிறுவனம் செய்லப்படவிருக்கிறதாம்.

தன்னார்வத்தில் எடுக்கப்படும் சுயாதீன தினரப்படங்கள் மற்றும் குறும்படங்கனள தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு வழிகளில் விநியோகப்படுத்துவதே Bench Flix-ன் நோக்கம். இதன் மூலமாக ஒரு படைப்பாளி, அவருக்கான அனடயாளத்னதயும், வருமான வழிவகைனயயும் உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெஞ்ச் பிளிக்ஸின் குறும்படங்களை www.benchflix.com என்னும் இணையதளத்தில் காணலாம்.
Bench Cast என்பது ஒரு தினரப்பட தயாரிப்பிற்கும், அதன் வெற்றிக்கும் மிக முக்கிய பங்கு வகிப்பது கதாப்பாத்திர தேர்வு தான். ஒரு தினரப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு, அதன் தற்போதைய செயல்பாட்டு முறைகளால், அதற்கு செலவிடப்படும் நேரமும், முயற்சியும் வெகு அதிகமாக காணப்படுகிறது. மேலும் திறமையும், ஆர்வமும் உள்ள பல நடிகர்கள் சரியான தேர்வு வழிமுனறகள் இல்லாததால் ஒரு இயக்குனரின் பார்வைக்கு வராமலே போய்விடுகின்றன்ர். இதை தவிர ஒவ்வொரு திரைப்படத்திற்க்கும் நிறைய புதுமுகங்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் திறமையுள்ள புதுமுகங்கள், பனடப்பாளிகனள அடைய சரியான ஒரு வழிமுனற இல்லாததால் ஒரு பெரும் இனடவெளி நிலவுகிறது. இந்த இனடவெளினய குனறத்து, படைப்பாளிகளையும் நடிகர்களையும் தொழில்நுட்பம் வழியாக ஒருங்கிணைக்கும் ஒரு மென்பொருள் மேடைதானாம் Bench Cast. இதன் இணையதளமான www.benchcast.com, அறிமுக நடிகர்களை, இயக்குனர்கள் தேர்வு செய்யும் ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளமாகும்.
Bench Subs எனபது உள்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு உலகளவில் வெளியாகும் வாய்ப்பினை அமைக்க, படங்களின் வசன வரிகளை மொழி பெயர்க்கும் சேவையே பெஞ்ச் சப்ஸின் நோக்கமாகும். இந்த சேவை பற்றி அறிய www.benchsubs.com என்ற இணையதளத்தை பய்னபடுத்திக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தின் துவக்க விழா சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது. இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், எஸ்.ஜே.சூர்யா, பாலாஜி மோகன், நடிகர்கள் சித்தார்த், பாபி சம்ஹா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;