‘லிங்கா’ தேதி உறுதியாகிவிட்டது!

‘லிங்கா’ தேதி உறுதியாகிவிட்டது!

செய்திகள் 10-Nov-2014 1:21 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’வின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக் குழுவினர் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை வருகிற 16ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ‘ராக்லைன்’ வெங்கடேஷ் பிரம்மாண்டமாக தயரித்துள்ள இப்படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமையை பிரபல ‘ஈராஸ்’ நிறுவனம் கை பற்றியுள்ளது. வருகிற 16-ஆம் தேதி இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாவதை தொடர்ந்து ஹிந்தி மொழியிலும் ‘லிங்கா’வின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையையும் ‘ஈராஸ்’ நிறுவனமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;