தனுஷின் ‘ஷமிதாப்’ படத்திற்கு உதவி செய்த கே.வி.ஆனந்த்!

தனுஷின் ‘ஷமிதாப்’ படத்திற்கு உதவி செய்த கே.வி.ஆனந்த்!

செய்திகள் 10-Nov-2014 12:50 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ரிலீசாகவிருக்கும் படம் ‘அனேகன்’. தற்போது ‘ஷமிதாப்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து தமிழில் நடிக்கும் படங்கள் ‘சூதாடி’ மற்றும் ‘மாரி’. ‘ஷமிதாப்’ படத்தில் வித்தியாசமான ஒரு கேர்கடரில் நடித்துள்ளாராம் தனுஷ்! இது குறித்து அவர் குறிப்பிடும்போது, ‘‘ஷமிதாப்’ எனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும். ‘அனேகன்’ படத்தில் நடிக்கும்போது தான் இப்படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சனை வரும் என்பதால் முதலில் நடிக்க தயங்கினேன். ஆனால், கே.வி.ஆனந்த் சார் கொடுத்த ஒத்துழைப்பாலும் சப்போர்ட்டாலும் ‘ஷமிதாப்’ படத்தில் நடிக்க முடிந்தது. ஒரு வேளை ‘ஷமிதாப்’ படத்தில் நடிக்க முடியாமல் போயிருந்தால் நான் நல்ல ஒரு படத்தை மிஸ் பண்ணியிருப்பேன். நான் நடித்த படங்களிலேயே ‘அனேகன்’ பிரம்மாண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் என்னை நடிக்க வைத்ததோடு, ‘ஷமிதாப்’ படத்திலும் நான் நடிக்க காரணமாக இருந்த கே.வி.ஆனந்த் சாருக்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது மிகையாகாது’’ என்றார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;