‘‘அமீரா ஒரு லூஸ் பெண்!’’ – கே.வி.ஆனந்த்

‘‘அமீரா ஒரு லூஸ் பெண்!’’  –  கே.வி.ஆனந்த்

செய்திகள் 10-Nov-2014 11:33 AM IST VRC கருத்துக்கள்

‘‘இதுவரை ஆக்‌ஷன் அடி,தடி படங்களை தான் நான் இயக்கியிருக்கிரேன். ஆனால் ‘அனேகன்’ படத்தை ஒரு ரொமான்டிக் காதல் கதையாக இயக்கியிருக்கிறேன். இந்த கதை தயாரானதும் இதற்கு மிகவும் பொருத்தமானவர் தனுஷ் என்று பட்டது! அவரை பார்த்து கதையின் அவுட்லைனை கூட சொல்லவில்லை, அதற்குள்ளாகவே இக்கதையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு நடிகர் தனுஷ்! அவரை இப்படத்தில் மாறுபட்ட ஒரு தனுஷாக நீங்கள் பார்க்க போகிறீர்கள்’’ என்றார் ‘அனேகன்’ படத்தை இயக்கியிருக்கும் கே.வி.ஆனந்த.

நேற்று மாலை சென்னை வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.தியேட்டரில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் இயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படி பேசினார். இதனை தொடர்ந்து படத்தின் கதாநாயகி அமீரா தஸ்தரை குறித்து கே.வி.ஆனந்த் பேசும்பொது, ‘‘அமீரா, பார்ப்பதற்கு ஒரு லூஸ் பெண் மாதிரி இருப்பார். ஆனால் நிஜத்தில் அப்படியில்லை (சிரிக்கிறார்)! அவர் அப்படி இருந்ததால் தான் நான் இப்படத்திற்கு அவரை தேர்வு செய்தேன். காரணம் இப்படத்தில் அவருடைய பாத்திரம் அப்படி! சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை பல காலகட்டங்களில் நடப்பது மாதிரி. தனுஷ், அமீராவுடன் ஐஸ்வர்யா தேவன், பாவனா, கார்த்திக் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவுக்கு ஒம் பிரகாஷ், இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் என இப்படத்தில் என்னுடன் கை கோர்த்துள்ள அத்தனை பேரும், பெரும் உழைப்பை இப்படத்தில் கொட்டியுள்ளனர். அனைவருக்கும் நன்றி’’ என்றார் கே.வி.ஆனந்த்.
இப்படத்தின் ஆடியோவை படத்தின் தயாரிப்பாளரும் ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவன அதிபருமான கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் கல்பனா அகோரம் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;