நட்டியின் ‘கதம் கதம்’ படத்தில் அதிநவீன கேமரா!

நட்டியின் ‘கதம் கதம்’ படத்தில் அதிநவீன கேமரா!

செய்திகள் 10-Nov-2014 11:24 AM IST VRC கருத்துக்கள்

‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு நட்டி என்கிற நட்ராஜ் நடித்து ரிலீசாகவிருக்கிற படம் ‘கதம் கதம்’. நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என இரண்டு மாறுபட்ட போலீஸ்காரர்களின் கதையை சொல்லும் படம் இது. இதில் நல்ல் போலீஸ்காரராக நந்தா நடித்திருக்க, கெட்ட போலீஸ்காரராக நட்ராஜ நடித்திருக்கிறார். 100 படங்களுக்கும் மேல் கதை, வசனம் எழுதி, ரஜினி நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, விஜயகாந்த நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’, கார்த்திக் நடித்த ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ உட்பட ஏராளமான படங்களை தயாரிக்கவும் செய்தவர் மறைந்த தூயவன். இவரது மகனும், திரைப்பட கல்லூரி மாணவருமான பாபு தூயவன் ‘கதம் கதம்’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக ‘அம்புலி 3டி’ படத்தில் நடித்த சனம் ஷெட்டியும், ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தில் நடித்த ஷாரிகாவும் நடித்திருக்கிறார்கள். தாஜ்னூர் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இரண்டு போலீஸ்காரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பதால் இப்படத்தில் ஆக்‌ஷன் மற்றும் சண்டை காட்சிகளை மாறுபட்ட வகையில் படமாக்கியுள்ளனராம். இதற்காக ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான பேனாவிஷன் கேமராவை வரவழைத்து இப்படத்தின் ஒளிப்பதிவில் பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் யூ.கே.செந்தில்குமார். தமிழ் சினிமாவில் இந்த கேமரா பயன்படுத்தி படம் பிடித்துள்ள முதல் படம் இதுதானாம். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் ‘அரண்மனை’ படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். அத்துடன் எல்லா மாநிலங்களிலும் 3டி வடிவில் வெளியாகி அனைவரின் கவனமும் பிரதமர் நரேந்திரமோடியின் தேர்தல் பிரச்சார வீடியோ காட்சிகளை படம் பிடித்தவரும் இவர் தான்!

அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படத்தை ஆர்.முரளியின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ உலகம் முழுக்க விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;